பீகார் மாநிலத்தில் 14,258 கோடியில் திட்ட பணிகள் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

புதுடெல்லி: பீகாரில் ரூ.14,258 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். பீகார் மாநிலத்தில் அடுத்த மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பீகாருக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, 14,258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 350 கி.மீ. தூரத்துக்கான 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு  பிரதமர் மோடி வீடியோகான்பரன்ஸ் மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும் 45,945 கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும் வகையில் ஆப்டிக்கல் பைபர் பொருத்தும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய மோடி, “ஆத்மநிர்பார் திட்டத்தின்படி, கிராமங்களை முக்கிய இடங்களாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது இன்று பீகாரில் இருந்து தொடங்குகிறது” என்றார்.

Related Stories: