ஒகேனக்கல் நீர்வரத்து இன்று மாலை 40,000 கனஅடியாக அதிகரிக்கும்.: கரையோர மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்

ஒகேனக்கல்: ஒகேனக்கல் நீர்வரத்து 20,000 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நேற்று நீர்வரத்து 13,000 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 7000 கனஅடி நீர் உயர்ந்து 20,000 கனஅடியாக வந்துகொண்டு இருக்கிறது. மேலும் இன்று மாலைக்கும் நீர்வரத்து 40,000 கனஅடியாக உயரும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒகேனக்கல் மற்றும் ஊட்டமலை பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் வேகமாக சரிந்துவந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.77 அடியாக இருந்தது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,480 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: