கோவை, குமரி மாவட்டத்தில் தொடர்மழை.: ஆழியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: தொடர்மழை காரணமாக தமிழகத்தில் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.  தொடர்மழை காரணமாக பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து 118 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3,625 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து பெய்து வரும் தொடர்மழையால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அறுவடை பணிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழையால் கோவை மற்றும் குற்றாலம் நீர்வீழ்ச்சிகளில் வெள்ள பேருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சுற்றுவட்டாரங்களில் விடிய விடிய சாரல்மழை பெய்தது.

Related Stories: