தேன்கனிக்கோட்டைக்கு 140 யானைகள் படையெடுப்பு: விவசாயிகள் பீதி

தேன்கனிக்கோட்டை: கர்நாடக மாநிலம் பன்னரகட்டா தேசிய பூங்காவிலிருந்து, கடந்த வாரம், தளி அருகே பேல்கரை வனப்பகுதி வழியாக 60 யானைகள், ஜவளகிரி அருகே மஞ்சுநாதா வனப்பகுதி வழியாக 80 யானைகள் என தமிழக வனப்பகுதிக்குள் ஊடுருவி உள்ளன. அவற்றை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சோலார் மின்வேலிகள் அருகே புற்களை அகற்றி சீர்செய்யும் பணியையும் முடுக்கி விட்டுள்ளனர்.

ஆனாலும், யானை கூட்டம் மீண்டும் ஜவளகிரி வனப்பகுதியிலேயே முகாமிட்டு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதி நோக்கி வர காத்து கிடப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். தற்போது, நிலக்கடலை அறுவடை துவங்கியுள்ள நிலையில், ராகி கதிர்கள் வெளியே வர துவங்கியுள்ளன. ஒரு மாதம் முன் கூட்டியே மெகா யானை கூட்டம் வரத் துவங்கியுள்ளதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். யானை கூட்டத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: