வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை மற்றும் நவராத்திரி  பிரமோற்சவம் அடுத்த மாதம் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை  கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதனால், பக்தர்கள் 5 மணிநேரத்துக்கு பிறகு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.  ஆழ்வார் திருமஞ்சனத்தின் போது, மூலவர் மீது பட்டு துணியால் மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சுவாமி,  வகுலமாத, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணிகள் நடைபெறும்.    பின்னர், பச்சை கற்பூரம், திருச்சூனம், மஞ்சள், கிச்சலிகட்டை உள்ளிட்ட மூலிகை பொருட்களால் ஆன கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்படும்.  இதனால், 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Related Stories: