பிரிட்டோரியா: டோனி அவரது வேலையை எப்படி செய்து முடிக்கிறாரோ அதே வழியில் நானும் செல்ல விரும்புகிறேன் என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். எம்.எஸ். டோனி சிறந்த பினிஷராக இருப்பதுபோல் தானும் இருக்க விரும்புகிறேன் என்று டேவிட் மில்லர் கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில்; டோனி அவருடைய பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து வைத்து அதற்கு ஏற்ப செயல்படுகிறார். நானும் அதை செய்வேன்.