சென்னை: மனநல மருத்துவம் தொடர்பான பணிகளில் ஈடுபவர்கள் மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மன அழுத்ததில் உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவது, தற்கொலை எண்ணங்களில் இருந்து ஒருவரை மீட்டு கொண்டு வருவது உள்ளிட்ட சிகிச்சைகளில் மனநல மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இந்த கொரானா காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனையில் மனநல சிகிச்சை பிரிவுகள் உள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மனநல மையம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய இடங்களில் மனநல சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இதைத்தவிர்த்து 16 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் மன நல சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவருகிறது.
