கொரோனாவை தடுக்க மூக்கு வழியாக ஸ்பிரே தடுப்பூசி!: சீன பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!

பீஜிங்: சீனாவில் கொரோனா பரவலை தடுக்க முதன் முதலாக மூக்கு வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் முதன்முதலாக கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உலகிற்கு தெரிய வந்தது.  இதன் பின்னர் உலகம் முழுவதிலும் இந்த கொரோனா வைரசின் பாதிப்பு பரவ தொடங்கியது. இதனால் அனைத்து நாடுகளும் பொருளாதாரரீதியாக பின்தங்கின . இதனையடுத்து பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதற்கிடையில், சீனாவில் இதன் பாதிப்புகள் கட்டுக்குள் வந்தன.  இதனால் அந்நாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. எனினும் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றானது பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தொற்றினால் மீண்டும் ஏற்படும் பேரிழப்புகளை தவிர்க்க, முதன் முதலாக மூக்கு வழியாக ஸ்பிரே செய்யக்கூடிய தடுப்பூசியை சீன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது, ஹாங்காங் பல்கலைக்கழகம், ஜியாமென் பல்கலைகழகம், பீஜிங் வாண்டாய் உயிரியல் மருந்தகம் ஆகியவை இணைந்து கூட்டாக இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளனர். இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட மருத்துவ பரிசோதனைக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் கழகம் தனது ஒப்புதலை அளித்துள்ளது. மேலும் இந்த மருத்துவ சோதனை நவம்பர் மாதம் தொடங்குமென தகவல் வெளியாகியுள்ளன. இதனைத்தொடர்ந்து, முதற்கட்டமாக 100 பேருக்கு மூக்கு வழியாக ஸ்பிரே செய்து, அதன் விளைவுகள் ஆராயப்படும் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: