பருவமழைக்கு முன்பே நிரம்பிய சோத்துப்பாறை அணை விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம் : தொடர் கனமழையால் சோத்துப்பாறை அணை பருவமழைக்கு முன்பே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே 8 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 126 அடி. கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும்.

தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால், சோத்துப்பாறை அணை வடகிழக்கு பருவமழைக்கு முன்பே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று 120.15 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 33 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கூறுகையில், ``இன்னும் வடகிழக்கு பருவ மழை துவங்காத நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்ந்து அதன் முழு அளவை எட்ட உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அணையின் முழு கொள்ளளவை செப்.11ம் தேதி எட்டும்’’ என்றனர். வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளவை எட்டும் நிலை உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: