வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் தருவிக்க மேல் வரி விதிப்பதை கைவிட ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறும் நிறுவனங்கள் மீது கூடுதலாக 34 காசு மேல்வரி விதிப்பதை அரசு கைவிட ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உயரழுத்தப் பிரிவில் இடம் பெறும் சில தொழிற்சாலைகள், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தை எடுத்துவர தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வழித்தடத்தை பயன்படுத்த யூனிட் ஒன்றிற்கு ஒரு ரூபாய் 96 காசுகள் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஒரு யூனிட்டிற்கு 34 காசுகள் மேல் வரி வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரியுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேல் வரி நடவடிக்கை என்பது தொழில் துறையை நசுக்குவதற்குச் சமமாகும். எனவே முதல்வர் இதில் தலையிட்டு, கூடுதலாக 34 காசு மேல்வரி விதிப்பதை கைவிட வேண்டும்.

The post வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் தருவிக்க மேல் வரி விதிப்பதை கைவிட ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: