செடிகள் நடுவே பஸ் ஸ்டாப்: பாம்புகள் வருவதால் பயணிகள் பீதி

ஊத்துக்கோட்டை: பஸ் ஸ்டாப்பை சுற்றி செடிகள் வளர்ந்துள்ளதால் அதில் இருந்து பாம்புகள் வருகிறது. இதனால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் மதுரவாசல் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மதுரவாசல் பஸ் ஸ்டாப்பில் இருந்து பெரியபாளையம், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளுக்கு பஸ்கள் செல்கிறது. மதுரவாசல் பஸ் ஸ்டாப் அருகே உள்ள கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பயன்படுத்துகின்றனர்.

கடந்த 2006,2007ம் ஆண்டு  50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட மதுரவாசல் பஸ் ஸ்டாப், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக பயணிகள் நடமாட்டமின்றி கிடந்ததால் அதை சுற்றி செடிகள் படர்ந்துள்ளது. இதில் இருந்து பாம்பு மற்றும் பூச்சிகள் வருவதால் பயணிகள் அச்சப்படு

கின்றனர். எனவே, செடிகளை அகற்றி பஸ் ஸ்டாப்பை சீரமைக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: