ஓவிய மராத்தான் போட்டியில் கமுதி வாலிபர் சாதனை

கமுதி: கமுதி அருகே பேரையூரை சேர்ந்த வாலிபருக்கு ஓவிய மராத்தான் போட்டியில் உலக சாதனை விருது கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூரை சேர்ந்தவர் மணிகண்டன்(21). இவர்  திண்டுக்கலில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் 25 பேருக்கு இலவச ஓவிய பயிற்சி அளித்து வந்தார். இந்த நிலையில், சீர்காழியில் நடந்த ஓவிய மராத்தான் போட்டியில் பங்கேற்றார். ‘‘ஜாக்கி கிரியோடன்ஸ் சுவடுகள்’’ என்ற அமைப்பின் சார்பாக நடைபெற்ற போட்டிக்கு அஞ்சல் வழி மூலமாக ஒரே வாரத்தில் 1200 ஓவியங்களை அனுப்பி வைத்தார்.

இந்த ஓவியங்கள் வரைவதற்கு தனது மாணவர்களை உறுதுணையாக பயன்படுத்திக்கொண்டார். இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மணிகண்டனுக்கு, சீர்காழியிலிருந்து, கலாம் உலக சாதனை விருது சான்றிதழ் மற்றும் மெடல் அஞ்சல் வழி மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். மணிகண்டனுக்கு உறுதுணையாக இருந்த மாணவர்கள் 25 பேருக்கு சான்றிதழ்களும் மடல்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் ஏற்கனவே இந்தியன் உலக சாதனை விருது, தேசிய ஓவிய ஆசிரியர் விருது ஆகியவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கலாம் உலக சாதனை விருது படைத்த வாலிபர் மணிகண்டனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Stories: