சுவநிதி சம்வாத் திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகள் புதிதாக பணியை தொடங்கலாம்: பிரதமர் மோடி உரை.!!!

டெல்லி: கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு படிப்படியாக தளர்ப்பட்டு வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் நான்காம் கட்ட  ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கிடையே, கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க கடந்த ஜூன் 1-ம் தேதியன்று, சுவநிதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. மத்தியப் பிரதேசத்தில் 4.5 லட்சம் சாலையோர வியாபாரிகள் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதில், தகுதியுடைய 2.45 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் இணையதளத்தின் மூலம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, 140 கோடி ரூபாய், நிதியுதவியை ஒரு லட்சத்து 40 ஆயிரம் சாலையோர வியாபாரிகளுக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில், ஒரு சில வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது, பேசிய பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசம் மற்றும் சிவராஜ் ஜி அணிக்கு வாழ்த்துக்கள். இவர்களது முயற்சிகள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு - மத்திய பிரதேசத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வெறும் 2 மாதங்களில் சுவநிதி சம்வாத்’ திட்டத்தில் பயனை உறுதி செய்துள்ளன.

மில்லியன் கணக்கான சாலையோர ஓட்டுநர்களின் நெட்வொர்க் இந்த அமைப்புடன் உண்மையிலேயே இணைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. கொரோனா ஊரடங்கு சாலையோர வியாபாரிகளின் வணிகம் பாதித்தது. இந்த ‘சுவநிதி சம்வாத்’ திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், சாலையோர வியாபாரிகள் புதிதாக ஆரம்பித்து மீண்டும் தங்கள் வேலையைத் தொடங்கலாம் என்றார்.

Related Stories: