சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிடுவது குறித்து மறு ஆய்வு வழக்குக்கு பிறகுதான் முடிவு: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, ஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அரசிதழில் வெளியிட்டது. பிராந்திய மொழிகளில் அதன் மொழி பெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் தியாகராஜன் மற்றும் வக்கீல் ராம்குமார் ஆகியோர் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் வரைவு அறிக்கையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு தயாராக உள்ளதாகவும் ஆனால் 22 பிராந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டுமென்ற டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதால், அதில் முடிவெடுக்கப்பட்ட பிறகே தமிழில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கைளை அக்டோபர் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: