ஏர்வாடியில் இருந்து இலங்கை தப்ப மிதவை தயாரித்த 3 பேர் கைது

கீழக்கரை: இலங்கை, அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர் முகம்மது அலி (43). இவர் 2006ல் விமானம் மூலம் தமிழகம் வந்தார். விசா முடிந்த பின்னரும் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை. தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களில்  சட்டவிரோதமாக தங்கியிருந்தார். இந்நிலையில், முகமது அலி ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் பைப்புகளால் மிதவை ஒன்றை நேற்று தயார் செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த ஏர்வாடி போலீசார், முகமது அலி மற்றும் அவருக்கு உதவிய முகமது அசன் (35), சாகுல் ஹமீது  (29) ஆகிய மூவரையும் கைது செய்தனர். முகமது அலியிடம் இருந்து இந்திய, இலங்கை ரூபாய் நோட்டுகள், பாஸ்போர்ட் மற்றும் இலங்கை குடியுரிமை ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: