அரசு மருத்துவமனையில் தரமற்ற உணவு கொரோனா நோயாளிகள் தர்ணா

சீர்காழி: சீர்காழி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 7ம் தேதி கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. கொரோனா சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறிதாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் உடனடியாக நோயாளிகள் மயிலாடுதுறை, திருவாரூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால் நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் உணவுகள் கபசுர குடிநீர் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சமைத்து வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக கூறி நேற்று கொரோனா நோயாளிகள் 43 பேர் வார்டில் இருந்து வெளியே வந்து உணவு சரியில்லை என கோஷம் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.

Related Stories: