42 ஊழியர், 5800 பசுக்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது

டோக்கியோ: ஜப்பான் அருகே 5,800 பசுக்கள், 43 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த அரேபிய சரக்கு கப்பல், புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. நியூசிலாந்தின் நேப்பியர் துறைமுகத்தில் இருந்து கிளம்பிய சரக்கு கப்பல் ஒன்று, சீனாவின் டங்சான் துறைமுகத்துக்குச் சென்று கொண்டிருந்தது. இதில், 5,800 பசுக்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. கப்பலில் 43 ஊழியர்கள் இருந்தனர். நேற்று சீனாவின் மேற்குக்கடல் பகுதியைக் கடக்கும்போது ஏற்பட்ட சூறாவளி காரணமாக கப்பல் நிலைகுலைந்து மூழ்கியது. இதனால் ஜப்பானிய கடற்படைக்கு உதவி கோரி, கப்பலில் இருந்தவர்கள் தகவல் அனுப்பினர். கடற்படை விரைவாக அந்த இடத்துக்குச் சென்றபோது, ஒருவர் மட்டுமே கடலில் தத்தளித்தபடி இருந்தார். அவரை கடற்படையினர் மீட்டனர். மற்ற 42 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. கால்நடைகள் மொத்தமாக கடலில் மூழ்கி விட்டன. அப்பகுதியில் விமானம் மற்றும் கப்பல் படையினரின் உதவியுடன் தீவிரமாகத் தேடுதல் பணி நடக்கிறது.

Related Stories: