ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலில் கொடிய விஷம் கலந்துள்ளது..தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார்: ஜெர்மன் அரசு தகவல்

பெர்லின்: ரஷ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி உடலில் கொடிய விஷம் கலந்துள்ளதாக ஜெர்மன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இவர் விளாடிமின் புதினை எதிர்த்து அதிபர் தேர்தலில் நிற்க முயன்று பின்னர் தடைவிதிக்கப்பட்டவராவார். தேர்தலுக்கு பிறகும் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்து வந்த  நவால்னி, விமான பயணத்தின் போது திடீரென சுயநினைவு இழந்து கோமா நிலைக்கு சென்றார். தேநீரில் விஷம் கலந்து நவால்னியை கொல்ல ரஷ்ய அதிகாரிகள் சதித்திட்டம் தீட்டியதாக பரவலாக குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெர்கலும் தலையிட்டதால் நவால்னியை சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு அனுப்ப ரஷ்ய அரசு அனுமதி அளித்தது.

ரஷ்யாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று பெர்லின் அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   அலெக்ஸிக்கு நேர்ந்தது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில், அலெக்ஸி நவால்னி உடலில் கொடிய விஷம் கலந்துள்ளதாக ஜெர்மன் அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜெர்மனி அரசு தரப்பில், ரஷ்ய எதிர்க் கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னி தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளார். நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கொடிய விஷம் அவருக்கு தரப்பட்டுள்ளது. மேலும் அந்த விஷம் ரஷ்யாவிலிருந்தே உற்பத்தி செய்யப்பட்டது. மேலும், அலெக்ஸி நாவல்னி மீதான இந்தத் தாக்குதலை ஜெர்மனி கடுமையாக கண்டிக்கிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: