இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் ஐக்கிய அமீரகம் துரோகம் இழைத்துவிட்டது: ஈரான் குற்றச்சாட்டு

டெஹ்ரான்: இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதன் மூலம் ஐக்கிய அமீரகம் இஸ்லாமிய நாடுகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது என்று ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார். ஐக்கிய அமீரகத்தின் இந்தத் துரோகம் நீண்ட நாட்கள் நீடிக்காது. ஆனால், இந்த களங்கம் எப்போதும் இருக்கும். அவர்கள் இஸ்ரேலை இந்தப் பிராந்தியத்தில் அனுமதித்துவிட்டார்கள். அவர்கள் பாலஸ்தீனத்தை மறுத்துவிட்டார்கள். இதற்காக ஐக்கிய அமீரகம் எப்போதும் இழிவுபடுத்தப்படும். விரைவில் அவர்கள் மீண்டும் இழந்ததை ஈடு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

முன்னதாக மத்திய கிழக்குப் பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே முழு வெளியுறவுத் தொடர்புகளை நிறுவுவதற்கான உடன்படிக்கை சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டது. இது இஸ்ரேலுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்.

ஏனெனில் பாலஸ்தீனத்துக்கு நாடு என்ற அந்தஸ்து வழங்கும் வரை இஸ்ரேலை அங்கீகரிக்கவோ, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ, சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவோ கூடாது என்ற முடிவில் மேற்கு ஆசிய நாடுகள் நீண்டகாலமாக இருந்தன. எனினும், 1979 எகிப்துடனும் 1994-ல் ஜோர்டானுடனும் இஸ்ரேல் தனது முழுமையான வெளியுறவுத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது. தற்போதைய உடன்படிக்கை இஸ்ரேலின் வெளியுறவுக்கு கிடைத்த மூன்றாவது வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories: