நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்...: ரயில்வே அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரயில், விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. எனினும், கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு, மே 12ம் தேதி முதல், தலைநகர் டெல்லி யிருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பாட்னா உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் மேலும் பல சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென தமிழக அரசு கோரியிருந்தது. இதை ஏற்ற தெற்கு ரயில்வே தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்களை வரும் 15ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: