ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் தங்கம் வென்றது இந்தியா: ரஷ்யாவுடன் கூட்டாக சாம்பியன்

புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, செஸ் ஒலிம்பியாட் தொடர் இம்முறை ஆன்லைனில் நடத்தப்பட்டது. மொத்தம் 163 அணிகள் களமிறங்கிய இந்த தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷ்யா மோதின.

முதல் சுற்றில் இந்திய அணி கேப்டன் குஜ்ராத்தி, பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி, ஹரிகா, ஹரிகிருஷ்ணா, திவ்யா ஆகியோர் டிரா செய்ததை அடுத்து 3.0-3.0 என சமனில் முடிந்தது. இரண்டாவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகா, விதித் ஆகியோர் டிரா செய்த நிலையில், ஹம்பி, சரின், திவ்யா தோல்வியை சந்தித்ததால் ரஷ்யா 4.5-1.5 என்ற கணக்கில் வென்றது.

எனினும்... நிஹல் சரின், திவ்யா தேஷ்முக் விளையாடியபோது இன்டர்நெட் தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் சர்வரிலும் கோளாறு ஏற்பட்டதாலேயே தோற்க நேரிட்டதாக இந்திய அணி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்ட சர்வதேச செஸ் கூட்டமைப்பு இந்தியா, ரஷ்யா கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவித்தது. செஸ் ஒலிம்பியாடில் இந்தியா தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: