சென்னை: பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் உடல்நிலை சீராக உள்ளது என எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்துள்ளது. ஐ.சி.யூ.வில் உள்ள எஸ்.பி.பி.க்கு வெண்டிலேட்டர், எக்மோ உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிசியோதரபி சிகிச்சைக்கு எஸ்பிபி உடல் ஒத்துழைப்பு தருகிறது எனவும் கூறியுள்ளது. உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கடந்த 5 ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13 ஆம் தேதி உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டு மருத்துவ குழுவின் ஆலோசனையின்படி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
