மலர் செடி கருகியதால் விவசாயிகள் கவலை

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். குன்னூர், ஊட்டி,  கோத்தகிரி, போன்ற பகுதிகளில் பல கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கொய் மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் மலர்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திரா, கோவா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அது  மட்டுமின்றி லண்டன், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது  ஏற்றுமதி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

இதனால் ஏற்கனவே பசுமை குடில்களில் வளர்க்கப்பட்ட லில்லியம், கார்னேஷன் உள்ளிட்டவை தற்போது  வாடியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  இங்கு சாகுபடி செய்யக்கூடிய மலர்களான கார்னீஷின் மலர்கள்  ஒரு கொத்து  அதிகபட்சமாக 150 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது‌. தற்போது 100 ரூபாய்க்கும்  குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.  எனினும், கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு காரணமாக 10 முதல் 20 சதவீதம் வரை கொய்மலர்கள் விற்பனைக்கு கொண்டு சென்றாலும் 3  மடங்கு விலை  குறைந்துள்ளது. இதனால் மலர் சாகுபடி விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

Related Stories: