கொடைக்கானல்: உருளைக்கிழங்கில் மேட்டுப்பாளையம் ரகம், கோளாறுரகம் என பல ரகங்கள் உள்ளன ஒவ்வொரு ரகத்திற்கெற்ப உருளைக்கிழங்கில் விளைச்சல் இருக்கும். கொடைக்கானல் மலைப்பகுதியில் பொதுவாக எளிதில் கிடைக்கக்கூடிய மேட்டுப்பாளையம் ரகம் கிழங்கு வகைகளை அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றன.
இந்த ரகத்தில் ஓரளவு விளைச்சல் கிடைக்கும். இந்த உருளைக்கிழங்கு ரகம் விதை கிழங்கு எளிதில் கிடைப்பதால் இந்த ரக உருளைக்கிழங்கு அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகளவில் விளைச்சல் கிடைக்க கூடிய உக்ரைன் நாட்டு உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. இந்த ரக உருளைக்கிழங்கு அதிக அளவில் விளைச்சல் கொடுக்கின்றது. அத்துடன் இந்த ரக உருளைக்கிழங்கு மிக ருசியாகவும் உள்ளது.