ஓணம் பண்டிகைக்கு கேரளாவில் தமிழக பூக்களுக்கு அனுமதி: முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள் கொண்டு வர கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பூக்கோலமிட தமிழகம், கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு பூக்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டியில், ‘ஓணத்தை முன்னிட்டு பொதுமக்கள் அந்தந்த இடங்களில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பூக்கோலத்திற்கு பயன்படுத்த வேண்டும், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்களை பயன்படுத்த வேண்டாம், அதன் மூலம், கொரோனா பரவ வாய்ப்பு உண்டு,’ என்று கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரள பூ வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பூக்களுக்கு முதல்வர் பினராய் நேற்று அனுமதி அளித்தார்.

கூடைகளை எரிக்க வேண்டும் வெளிமாநிலங்களில் பூக்கள் கொண்டு வருவதற்கு பினராய் விதித்த கட்டுப்பாடுகள்:

* மற்ற மாநிலங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வர  தடையில்லை.

* பூ விற்பனையின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* கேரளாவுக்கு பூ கொண்டு வரும் வெளிமாநில வியாபாரிகள், கேரளா அரசின் கொரோனா இணைய தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

* கேரள சந்தைகளில் நெருக்கமாக நின்று கொண்டு பூ விற்பனை செய்யக்கூடாது. முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.

* பூக்களை விற்பனை செய்த பின்னர், அந்த கூடைகளை எரித்து விட வேண்டும்.

Related Stories: