தஞ்சையில் இதய நோயாளியை அலைக்கழித்த மருத்துவமனைகள் - வீடு திரும்பிய நோயாளி...உறவினர்கள் வேதனை

தஞ்சை:  தஞ்சையில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இதய நோயாளியை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அலைகளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டையை சேர்ந்த இன்பராஜ், இருதய நோய் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கொரோனா தொற்று இருப்பதாக கூறி, சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த இன்பராஜ், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு அங்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்துள்ளது. இதனையடுத்து கொரோனா இருப்பதாக தனியார் மருத்துவமனையும், தொற்று இல்லை என அரசு மருத்துவமனையும் கூறி, இதய நோயாளி இன்பராஜை அலைக்கழிக்க வைத்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த இன்பராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல், வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றுகொள்வதாக கூறிவிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மிகுந்த வேதனையும், அச்சமும் அடைந்துள்ளனர். ஏனெனில் கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: