கரையான்சாவடி தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு அமைச்சர் ஆறுதல்

பூந்தமல்லி: கரையான்சாவடி கலைஞர் தெருவில் நேற்று முன்தினம் அதிகாலை மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததில் 9 குடிசைகள் தீயில் எரிந்து சேதமானது. இதில் வீட்டிலிருந்த துணிமணிகள், டிவி, கட்டில், நோட்டு புத்தகங்கள், ஆதார், ரேஷன்கார்டு, சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. தகவலறிந்த ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து எரிந்துபோன வீடுகளை பார்வையிட்டார். பின்னர் வீடு இழந்து பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், வேட்டி, புடவை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், தீ விபத்தில் எரிந்துபோன சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்றவை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது, துணை தாசில்தார் உதயா, முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன், நகர செயலாளர் தேவேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி.டி. கவுதமன், முன்னாள் கவுன்சிலர் மதுரவாயல் தேவதாஸ், சார்லஸ், பி.டி.மாறன், ஹரிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: