அமெரிக்காவில் டிக்டாக்-க்கு தடை!: டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட டிக்டாக் நிர்வாகம் திட்டம்..!!

வாஷிங்டன்: டிக்டாக்கை அமெரிக்காவில் தடை செய்யும் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா - அமெரிக்கா இடையேயான மோதல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் பட்சத்தில் டிக்டாக்-கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக அமெரிக்காவின் மைக்ரோசாப்ட், ட்விட்டர், ஓரக்கல் போன்ற நிறுவனங்களுடன் டிக்டாக் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் டிக்டாக் செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிர்வாகம் சார்பில் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: