தி.மலை வந்தவாசியில் பார்வை குறைபாடுள்ள மாணவி தனியார் கல்லூரியில் உயர் கல்வி பயில மாவட்ட ஆட்சியர் வழிவகை!!

திருவண்ணாமலை:  சன்செய்தி எதிரொலியாக பார்வை குறைபாடுள்ள மாணவிக்கு கல்லூரியில் சேர மாவட்ட ஆட்சியர் உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மாலையிட்டான் குப்பத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் சரண்யா, உயர் கல்வி கிடைக்காமல் தவித்து வருவதாக சன் டீவியில் சிறிது நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதனையடுத்து பார்வை குறைபாடுள்ள இந்த மாணவி 12ம் வகுப்பில் 404 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றுள்ளார். இந்த நிலையில் உயர்கல்வி எட்டா கனியாகிவிடுமோ? என்ற ஏக்கத்தில் அந்த மாணவி தவித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டாமென்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், ஆன்லைன் மூலம் கல்லூரியில் சேர முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார் இந்த மாற்று திறனாளி மாணவி. இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சரண்யா உயர்கல்வி பயில வழிவகை செய்துள்ளார். அதாவது தனியார் மகளிர் கல்லூரி ஒன்றில் அவர் உயர்கல்வி பயில ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை அம்மாணவிக்கு நல்லதொரு ஊக்க சக்தியாக அமைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களும் ஆட்சியருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: