ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் கடல் சீற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவு மன்னார்வளைகுடா கடலில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை தென் கடலில் பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் ஆக்ரோசமாக எழும் கடல் அலைகள் எம்.ஆர் சத்திரம் ஜெட்டி  பாலத்தில் மோதி பல அடி உயரம் சீறிப் பாய்கிறது. தொடர் சூறைக்காற்றால் கடல் பெருக்கு ஏற்பட்டு தென்கடல் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு 5 அடி உயரம் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடற்கரை ஓரங்களில் உள்ள ஏராளமான குடிசைகள் காற்றில் சேதமடைந்து கீழே விழுந்தது.

Related Stories: