கோழிக்கோடு விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போதுமான பலத்தை இறைவன் கொடுக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை: கோழிக்கோடு விமான விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரையிரங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழையால் விமானம் தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டு விமானம் பள்ளத்தில் விழுந்தது. விபத்தில் உள்ளவர்களை மீட்க மத்திய அரசும் மாநில அரசும் முழு வீச்சில் நேற்று இரவிலிருந்து கன மழைச்சூழலில் செயல்பட்டு வருகிறார்கள்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு ரத்தம் கொடுக்க கேரள இளைஞர்கள் வரிசையில் நின்று மனிதாபிமானத்தை காட்டியுள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில்,  விமான விபத்து சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கோழிக்கோடு விமான விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகுந்த சோகமடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு போதுமான பலத்தையும், காயமடைந்தவர்களை விரைவாக மீட்கவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>