ஆன்ைலன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு சாவு

தேவாரம்: ஆன்லைன் வகுப்புக்கு தந்தை ஆன்ட்ராய்ட் போன் வாங்கித் தராததால், மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தேவாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரத்தில் உள்ள சாலைத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். கூலிதொழிலாளி. இவரது மகள் வின்சியா (18). கம்பத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2ம் ஆண்டு படித்து வந்தார். ஊரடங்கால் செல்வம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடந்து வருகின்றன.

இதனால், வின்சியா தனது தந்தையிடம் ஆன்ட்ராய்ட் செல்போன் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அவர், ‘வேலையில்லாமல் வருமானத்துக்கு திண்டாட்டமாக உள்ளது. கொஞ்ச நாள் கழித்து வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதனால், மனமுடைந்த வின்சியா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தேவாரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: