கொரோனாவால் பாதிக்கப்பட்ட ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார்: 1 வாரம் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவர்கள் அறிவுரை.!!!

போபால்: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் குணமடைந்தார். கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் நாடு முழுவதும் 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள், அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதற்கிடையே, பாரதிய ஜனதா மூத்த தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளேன். கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக டிவிட்டரில் பதிவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் போபாலில் உள்ள சிராயு தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து போபாலில் உள்ள சிராயு தனியார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். மேலும், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தவும், மேலும் 7 நாட்களுக்கு அவரது உடல்நிலையை சுயமாக கண்காணிக்கவும் மருத்துவர்கள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நான் நலமுடன் இருக்கிறேன் என் நண்பர்களே. சுயநலம் எதுவும் இன்றி தங்கள் உயிரை பணையம் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் கொரோனா வாரியர்ஸின் சேவை மதிப்புமிக்கது. கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் சல்யூட் செய்கிறேன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அஞ்ச வேண்டாம்.  அறிகுறிகள் தென்பட்டதும் மறைக்காமல் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.  கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் எதுவெனில் முகக்கவசம், ஆறு அடி இடைவெளி ஆகியவையே ஆகும். எனவே, இதை தவறாது பின்பற்றுங்கள், என குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: