இன்று முதல் 2 நாட்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்: மக்கள் பணிகள் முடங்கும் அபாயம்

காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் வருவாய்த்துறை பணியாளர்களுக்கு, உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் இன்றும் (ஆக.5), நாளையும் தற்செயல் விடுப்புப் போராட்டமும், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் முருகையன், மாநில தலைவர் குமரேசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த இழப்பீடு தொகை ரூ.50 லட்சத்தை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா பணியின்போது தொற்று ஏற்பட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அலுவலர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்த் தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்களுக்கு உயர்தர தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தற்செயல் விடுப்புப் போராட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: