கிருஷ்ணாபுரம் நீர்தேக்கம் திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பள்ளிப்பட்டு: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணாபுரம் நீர் தேக்க அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து, உபரி நீர் நேற்று முன்தினம் இரவு வெளியேற்றப்பட்டது. அணையிலிருந்து உபரி நீர் தமிழகத்தில் பள்ளிப்பட்டு பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு பாய்ந்து செல்கிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் செல்வகுமார் தலைமையில் வருவாய் துறையினர் கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், நீலத்தடி நீர் மட்டம் உயர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கும், குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும் என்று மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: