சென்னை: தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் 2020-21ம் ஆண்டிற்கான பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பொறியியல் சேர்க்கைக்கு சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த நரசிம்மன் காந்த் கூட்டு மதிப்பெண் தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் 99.2462 விழுக்காடு பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சமனப்படுத்தும் முறையில் பாலக்காட்டை சேர்ந்த GMMGHS பள்ளியை சேர்ந்த டியுதி தம்பன் 1191/1200 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.NTR Junior College, Telanganaவை சேர்ந்த மைனம் ஹர்சினி சட்ட படிப்பில் சேர்வதற்கான சமனப்படுத்தும் முறையில் தேசிய அளவில் 98.1 விழுக்காடு பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.