புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் காலமானார். அவருக்கு வயது 64. கடந்த 2011-ம் ஆண்டு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட அமர்சிங், ஆரோக்கியமாகவே செயல்பட்டு வந்தார். மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவராக நீண்டகாலமாக செயல்பட்டு வந்த அமர்சிங், முலாயம் சிங்குக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அகிலேஷ் யாதவின் வருகைக்குப் பிறகு விலகிக் கொண்டார்.