நாட்டின் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் 15% வரை சரிவு - மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் வளர்ச்சி விகிதங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில் ஜூன் மாதத்துக்கான வளர்ச்சி 15 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து நான்காவது மாதமாக முக்கியத் துறைகளின் உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது.

உரத்துறையை தவிர மற்ற அனைத்து முக்கியத் துறைகளிலும் வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜுன் மாதம் வரையிலான ஒட்டுமொத்த வளர்ச்சி 24 சதவீதமாக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: