தமிழ், அரபி எழுத்துக்களுடன் கிபி 16ம் நூற்றாண்டு கல்வெட்டு: ஏர்வாடி தர்ஹா அருகே கண்டுபிடிப்பு

கீழக்கரை: ஏர்வாடி தர்ஹா அருகே கிபி 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் மற்றும் அரபி எழுத்துகள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா அருகே ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு அக்கல்வெட்டை படமெடுத்து ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

ஏர்வாடி தர்ஹா அருகே ஏரான்துறையிலுள்ள தோப்பில் ஆறரை அடி உயரம், ஒன்றரை அடி அகலம் உள்ள ஒரு கடற்கரைப் பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. அதில் உள்ள கல்வெட்டின் ஒரு பக்கத்தில் தமிழ் எழுத்துக்கள், மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகள், குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளது. அரபி எழுத்துகள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. இது கிபி 16ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம்.

Related Stories: