தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வி அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கருத்து கேட்டார். மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தின்படி பெற்றோரிடம் கருத்து கேட்டு அனுப்பும் பணியும் நடக்கிறது. அதுகுறித்தும் கேட்டார். அதேபோல, கடந்த மார்ச் 24ம் தேதி நடந்த தேர்வை எழுத முடியாமல் விடுபட்டுப்போன மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி விட்டதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து இன்று அல்லது நாளை இந்த தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நிலுவையில் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Related Stories: