திமுக சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஆதிதிராவிடர் காலனி திமுக கிளை சார்பில் வக்கீல் அ.பிரகாஷ் ஏற்பாட்டில் கொரோனா வைரஸ் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில், திமுக கிளை செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகிராஜி, திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் டி.ராஜி, செஞ்சி அன்பு, ரஞ்சன், ஸ்ரீதர், தாவீது, சிவக்குமார், அந்தோணி, பிரபு,ஜெயசீலன், ஆனந்தராஜ்,  முருகன், சாமிதாஸ், கீதாசாமிதாஸ், ரம்யாதர், இன்பராஜ், ஆமோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: