ஊழியரிடம் செல்போன் பறிப்பு

புழல்: செங்குன்றம் அடுத்த கோட்டூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (30). இவர், சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். சுரேஷ், நேற்று முன்தினம் இரவு பணியை முடித்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை அம்பேத்கர் சிலை அருகே வந்தபோது அவருக்கு போன் வந்தது. இதனால் அவர் பைக்கை நிறுத்தி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு பைக்கில் எதிரே வந்த 2 பேர், சுரேஷின் செல்போனை பறித்து அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடுகின்றனர்.

Related Stories: