இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என அரசு சொல்வது பெரிய மோசடி: மூத்த ஆராய்ச்சியாளர்கள் கருத்து

இந்தியாவில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கொரோனாவின் தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது. ஆனால், ‘இந்தியாவில் இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லை,’ என கேரளாவை தவிர மற்ற மாநில அரசுகளும், மத்திய அரசும் கூறி வருகின்றன. ஆனால், ‘சமூக பரவல் நிலையை நாடு இன்னும் எட்டவில்லை என கூற முடியாது,’ என மூத்த ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ நிபுணர்களும் கூறுகின்றனர். ‘‘சங்கிலித் தொடர்போல் தொற்று நீண்டு கொண்டே போகிறது. இந்த பரவல் முதலில் வெளிநாட்டினரிடம் இருந்தே இந்தியாவிற்குள் வந்தது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால், இந்தியாவில் சமூக பரவல் அளவுக்கு பாதிப்பு வந்திருக்காது. 12 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சமூக பரவல் இல்லையென அரசு கூறுவது நகைப்புக்குரியதாகவும், உண்மையை மறைக்கும் வகையிலும் உள்ளது,’’ என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

ஆனால், ‘நாட்டில் உள்ள 773 மாவட்டங்களில் 49 மாவட்டங்களில் மட்டுமே பாதித்துள்ளதால் சமூக பரவல் என கூற முடியாது,’ என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இது குறித்து பிரபல வைரஸ் நிபுணர் ஷாகித் ஜமீல், ‘அரசின் தகவல்களில் உண்மைத்தன்மை இல்லை,’ என்கிறார். ‘‘நாட்டின் மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடும்போது, 12 லட்சம் பேர் மட்டுமே பாதிககப்பட்டு உள்ளனர் என்பது நம்பும்படி இல்லை. எண்ணிக்கை குறைத்து கூறப்படுகிறது. ஆனால், யாரிடம் இருந்து யாருக்கு கொரோனா பரவியது? பரவியதற்கான காரணம் என்ன? தனக்கு எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது கூட இன்னும் பலருக்கு தெரியவில்லை.

இந்நிலையில், சமூக பரவல் இல்லை என எப்படி கூற முடியும்? இந்தியா இப்போது இக்கட்டான கட்டத்தில் உள்ளது. சமூக பரவல் நிலை வந்து விட்டதாக அரசு ஒருவேளை ஒப்புக்கொண்டால், ஏன் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்க வேண்டும்? ஏன், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்? என மக்கள் கேள்வி எழுப்புவர். இது போன்ற நிலையை தவிர்ப்பதற்காகவே, இன்னும் சமூகப் பரவல் நிலையை நாடு அடையவில்லை என கூறுகிறது,’’ என்கிறார் மூத்த பேராசிரியர் ஜெயபிரகாஷ் முள்ளியில். ‘‘நாட்டில் சமூகப் பரவல் இல்லை என கூறுவோர், அரசுடன் ஒப்பந்தம் செய்தவர்கள். இவர்கள் ஏற்றுக்கொண்ட உறுதியை மீறி எப்படி கூற முடியும்? சமூகப் பரவல் என்பதற்கு மருத்துவ புத்தகத்தில் உரிய விளக்கம் இல்லை என்றும், சமூகத்தின் கடைசி மனிதன் வரையில் வைரஸ் பரவியுள்ள நிலையில், அது சமூக பரவலாக மாறவில்லை என்பது ஒரு மெகா மோசடி’’ என்கிறார்,’’ என்று ஜெயப்பிரகாஷ் கூறுகிறார்.

* இக்கட்டான நிலையில் இந்தியா

மூத்த பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் முள்ளியில் மேலும் கூறுகையில், ‘‘இந்தியா இப்போது இக்கட்டான கட்டத்தில் உள்ளது. சமூக பரவல் நிலை வந்து விட்டதாக அரசு ஒருவேளை ஒப்புக்கொண்டால், ஏன் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை மண்டலங்களாக பிரிக்க வேண்டும்? ஏன், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்? என மக்கள் கேள்வி எழுப்புவர். இதை தவிர்க்கவே, இன்னும் சமூகப் பரவல் நிலையை நாடு அடையவில்லை என கூறுகிறது,’’ என்றார்.

Related Stories: