மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அரசர் கோயில் கிராமத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கி, அர்ச்சகராக கண்ணன் பட்டாச்சாரியர் (40) பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கண்ணன் பட்டாச்சாரியர், சாயங்கால பூஜைக்காக கோயில் நடையை திறந்து தீபாராதனை செய்து கொண்டிருந்தார். அப்போது, சகாய நகரை சேர்ந்த அந்தோணி செல்லம் உள்பட 2 பேர், கருவறையில் உள்ள மூலவர் சிலையை படம் பிடித்தனர். இதை பார்த்த அர்ச்சகர், அவர்களை தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 பேர், கண்ணன் பட்டாச்சார்யரை, சரமாரியாக தாக்கி, பூணூலை அறுத்தனர். இதுகுறித்து கண்ணன் பட்டாச்சாரியார், படாளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணி செல்லம் உள்பட 2 பேரை, வலைவீசி தேடி வருகின்றனர்.