சென்னை: விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிடக் கோரி செங்கல்ப்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். என்னை வீட்டுக்குள் அனுமதிக்க விஜய் மறுப்பதாக சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும், குழந்தைகளுக்கு நியாயமான ஜீவனாம்சம் வழங்கவேண்டும். ஏற்கெனவே தாக்கல் செய்த விவாகரத்து வழக்கின் மூலம் விஜயிடம் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளேன்.
விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வசிக்க வீடின்றி தவிக்கிறேன். விவாகரத்துக்கு பிறகு வேறு வீட்டுக்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டும். பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. திரிஷாவுடன் விஜய் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், சங்கீதா புதிய மனு தாக்கல் செய்துள்ளார். விவாகரத்து முடியும் வரை விஜய் வீட்டில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது.
விவாகரத்து வழக்கு முடியும் வரை விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் அனைத்து உரிமைகள், வசதிகளுடன் வசிக்க உத்தரவிட வேண்டும். நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ள விஜய், தன்னை தனிமைப்படுத்தி துன்புறுத்துவதாக சங்கீதா கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டு இருக்கிறார் என இயக்குநர் அமீர் பதிவிட்டுள்ளார். மனைவி, மகள் இருவரையும் வீட்டிலிருந்து விரட்டி விட்டு மகளிர் தின விழா எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி. என்று கூறியுள்ளார்.
