யெஸ் வங்கி மோசடி வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ராணா கபூரின் ஜாமின் மனு தள்ளுபடி

டெல்லி: யெஸ் வங்கி மோசடி வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான ராணா கபூரின் ஜாமின் மனுவை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட யெஸ் வங்கியில் கடந்த சில மாதங்களுக்கு முன் மிகப் பெரிய முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பாக வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்த ராணா கபூர் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த முறைகேட்டுக்கு உதவியாக இருந்து, பணப் பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக, டி.எச்.எப்.எல்., என்ற நிதி நிறுவனத்தின் புரமோட்டர் கபில் வாத்வான், அவது சகோதரர் தீரஜ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அமலாக்கத் துறையினர் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ராணா கபூரை கடந்த மார்ச்சில் கைது செய்தனர். கடந்த ஜூலை 9-ம் தேதி ராணா கபூரின் ரூ.1,200 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் ஜாமின் கோரி ராணா கபூர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜ்வைத்யா ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: