ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பேரி ஜர்மன் காலமானார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பாரி ஜர்மன் (84) நேற்று காலமானார். ஆரம்ப காலத்தில் கால்பந்து, கிரிக்கெட் என இரண்டு விளையாட்டிலும் அசத்தி வந்த ஜர்மன், காலில் அடிபட்டதால் கால்பந்து விளையாட்டை ஏறக்கட்டி விட்டு,  கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தினார். 1959ல் ஆஸ்திரேலிய தேசிய அணியில் இடம் பிடித்தார். கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகக் களம் கண்டார்.   விக்கெட் கீப்பரான  ஜர்மன் 1968ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் போது காயமடைந்த பில் லாரிக்கு பதில் கேப்டன் ஆனார்.

தொடர்ந்து 19 டெஸ்ட்கள் விளையாடி, 1969ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். சர்வதேச போட்டிகளில் நடுவராகவும் பணியாற்றினார். கிரிக்கெட் வீரர், நடுவர், பயிற்சியாளர் என பன்முகத்திறமை கொண்ட ஜெர்மன் மறைவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஐசிசி, கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: