கொரோனா தடுப்பு ஆராய்ச்சித் தகவல்களை திருட முயற்சியா? : ரஷ்யா மீது இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா குற்றச்சாட்டு!!!

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷ்யா மீது இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா வைரஸானது முதலில் சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதாரரீதியாக பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. இதனால், உலக அளவில் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் முற்றிலுமாக ஈடுபட்டுள்ளன. இதனால், அந்த ஆராய்ச்சியின் தகவல்களை திருட முயற்சிப்பதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது, ஆய்வக கணினிகளில் ஊடுருவி கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சி தகவல்களை திருட ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சிப்பதாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிறுவனங்களை ரஷ்ய ஹேக்கர்கள் தொடர்ந்து குறிவைப்பதாக அந்நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: