உமிழ் நீர் மூலம் கொரோனா கண்டறியும் பரிசோதனை!: அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலை புது முயற்சி!!!

வாஷிங்டன்: கொரோனா தொற்று இருப்பதை உமிழ் நீர் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க முடியுமா என அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சீனாவில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. பல நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். உலக நாடுகளில் சிலருக்கு அறிகுறியே இன்றி இந்த கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படுகிறது.

சளி மாதிரிகளை கொண்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை மருத்துவர்கள் உறுதி செய்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் உமிழ் நீர் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். வழக்கமான தொண்டை சளிக்கு பதிலாக உமிழ் நீரை சோதித்து கொரோனா இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தால் அது பல வழிகளில் நன்மை பயப்பதாக இருக்கும் என்று ஆய்வை நடத்தும் குழுவின் தலைவரான பேராசிரியர் ஜெனிபர் தெரிவித்துள்ளார்.

உமிழ்நீர் பரிசோதனையை விரைவாக செய்ய முடிவதுடன் இதற்கான மாரிதியை எடுக்க பயிற்சி பெற்ற நபரும், பாதுகாப்பான உடைகள் தேவையில்லை என்றும் ஜெனிபர் தெரிவித்தார். கொரோனா பரிசோதைக்கு உட்படுபவரே சோதனை குழாயில் 1 மில்லி அளவுக்கு உமிழ் நீரை துப்பினால் போதுமானது என்றும் அவர் கூறினார். கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் நடப்பது தவிர வேறு 3 உமிழ்நீர் பரிசோதனைகளும் அமெரிக்காவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: