சுனந்தா தற்கொலை வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

டெல்லி:  சுனந்தா புஸ்கர் மரணம் தொடர்பான வழக்கில் அவரது டுவிட்டர் பதிவுகளை ஆராய போலீசாருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைதைய திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூரின் மனைவியுமான சுனந்தா புஸ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி உயிரிழந்தார். அதாவது, டெல்லி 5 நட்சத்திர ஓட்டலில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனைத்தொடர்ந்து, சுனந்தா எப்படி? இறந்தார் என்பது இதுவரை புதிராக இருந்து வருகிறது. இந்த வழக்கில் சசி தரூர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். தற்போது, சசி தரூர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தாக்குதல் போன்ற பிரிவுகளில் மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நேற்று மீண்டும் இந்த வழக்கில் விசாரணை தொடங்கிய நிலையில், சுனந்தா புஸ்கரின் டுவிட்டர் பதிவுகளையும் ஆதாரமாக சேர்க்க வேண்டும் என்று சசி தரூர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், மரணத்திற்கு முன்பாக சுனந்தா புஸ்கர் என்ன மனநிலையில் இருந்தார் என்பதை டுவிட்டர் பதிவுகள் மூலம் அறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் டுவிட்டர் பதிவுகளை ஆராய டெல்லி போலீசாருக்கு செப்டெம்பர் 17ம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories: